TNPSC Thervupettagam

அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதி 

April 20 , 2020 1554 days 635 0
  • அகில இந்திய வேளாண் போக்குவரத்து தகவல் அழைப்பு மைய வசதியை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது  அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த வசதியானது மாநிலங்களுக்கு இடையில் அழுகக் கூடிய பொருட்களின் போக்குவரத்து இயக்கத்தை மேற்கொள்ள உதவும்.
  • இந்தத் தகவல் அழைப்பு மையங்களை IFFCO (இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு நிறுவனம்) கிசான் சஞ்சார் லிமிடெட் நிறுவனமானது இயக்க உள்ளது.
  • IKSL நிறுவனமானது இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் மற்றும் ஸ்டார் குளோபல் ரிசோர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் இணைந்து ஊக்கமளிக்கப் படுகிறது.
  • இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் நிறுவனமானது 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்